முதலாம் இராசராச சோழரின் தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டு (பொ.ஆ. 1011) அமைவிடம்:
தஞ்சாவூர், இக்கல்வெட்டுக்கள் பெரியகோயிலின் விமானத்தின் அடிச்சுவற்றில்
வடக்கு மற்றும் மேற்குப் புறத்தில் அமைந்துள்ளன. குறிப்பு இதுவே தஞ்சைப் பெரிய கோயிலில் மொத்தம் 97கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றுள் முதல் கல்வெட்டாக இக்கல்வெட்டு இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டு கோயிலின் விமானச் சுவற்றின் வடக்கு மற்றும் மேற்குப் புறங்களில் வெட்டுப்பட்டுள்ளது. வடபுறம் 9 பிரிவுகளும் மேற்கு புறம் 4 பிரிவுளுமாக பிரிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு 99 பத்திகளை கொண்டுள்ளது. 1. ஸ்வஸ்ஸ்ரீ திருமகள் போலப் பெருநில செல்வியுந்
தனக்கேயுரிமை
கல்வெட்டுச் செய்தி இக்கல்வெட்டு தஞ்சைப் பெரிய கோயிலில் முதன் முதல் வெட்டப்பெற்றுள்ள கல்வெட்டாகும். சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் தாம் தஞ்சாவூரில் எடுப்பித்த கோயிலில், ஸ்ரீ பலி கொள்கைதேவர், தட்சிண மேரு விடங்கர் போன்ற பொற் சிலைகளை எழுந்தருளிவித்துள்ளார். இச்சிலைகளுக்கு ஆபரணங்களை ராஜராஜனும் அவரது தமக்கையாரும் , மனைவிமார்களும் மற்றும் பிறரும் கொடை வழங்கியுள்ளனர். அவர்கள் கொடுத்த பொற்கொடைகளைப் பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோயிலை நாம் இன்று பெரிய கோயில் என்று தமிழிலும் , பிரகதீஸ்¢வரம் என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கின்றோம். ஆனால் ராஜராஜன் தாம் கட்டிய இக்கோயிலுக்கு தமது பெயரை இட்டு ‘ஸ்ரீ ராஜராஜீஸ்வரம்’ என்று அழைத்துள்ளார். தமது வாய்மொழி ஆணையின் மூலம் (திருவாய்மொழிந்தருளி) இதை விமானக் கல்லிலே வெட்டவும் கூறியுள்ளார். இக்கல்வெட்டின் முதற்பகுதியில் இடம்பெறும் ராஜராஜனின் மெய்க்கீர்த்தியில் ராஜராஜன் காந்தளூர்ச் சாலை, கங்க பாடி, நுளம்ப பாடி, கங்க பாடி, இரட்டப்பாடி ,குடமலை நாடு, கொல்லம், கலிங்கம், ஈழம் இப்பகுதிகளை வென்றதையும் பாண்டியரை வென்றதையும் கூறுகின்றது. பொன்னை அளக்க ஆடவல்லான் என்னும் எடைக்கல் பயன்படுத்தப்பெற்றுள்ளது. ராஜராஜன் இந்த ஆணையை அரண்மனைக்குக் கீழக்குத் திசையிலுள்ள அரசர்கள் குளியலறையிலிருந்து வழங்கியதாகக் கூறப்படுகிறது. அரண்மனையின் பெயர் இருமடி சோழன் என்று அழைக்கப்பெற்றுள்ளது. சிறப்பு அறசெயல்களைக் கேட்ட உடனே செய்யும் எண்ணம் அரசர்களிடம் இருந்துள்ளது. இது ராஜராஜன் குளியறையில் இருக்கும்பொழுது கூட தானம் செய்துள்ளதால் இது விளங்கும். | |